தேவையான பொருட்கள்
நொறுக்கிய சேமியா – ஒரு கப்
சர்க்கரை – அரை கப்
தேங்காய் துருவல் – அரை கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி – தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை :
கடாயில் நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அதே கடாயில் சேமியாவை போட்டு வறுத்து கொள்ளவும்.
வறுத்த சேமியாவில் சிறிது உப்பு சேர்த்து கலந்த பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசறி 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், நறுக்கிய முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
புட்டு குழலில் முதலில் தேங்காய் துருவலை போட்டு அதன் மேல் பிசறி வைத்த சேமியாவை போட்டு அதன் பின் தேங்காய் துருவல், சேமியா என்ற வகையில் போட்டு ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
சத்தான சுவையான சேமியா புட்டு ரெடி.