தமிழ்நாடு முழுக்க 500-கும் மேற்பட்ட பள்ளிகளுடனும், பிரபல யூ-டியூப் கல்வியாளர்களுடனும் ஒன்றிணைந்து இந்த அப்ளிகேஷன் முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம். அனுபவமிக்க ஆசிரியர்கள், பிரபல யூ-டியூப் கல்வியாளர்கள், நன்றாக படிக்கும் மாணவர்கள் என பலரும் கல்வி சம்பந்தப்பட்ட தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அதனால் கடினமான கணக்கு சூத்திரங்கள், புரியாத அறிவியல் கோட்பாடுகள், புதிரான பாடத்திட்டங்களை எல்லாம் இனி அனுபவமிக்க கல்வியாளர்கள் தங்களுடைய பதிவின்மூலம் விளக்க உள்ளனர். இதுமட்டுமின்றி சுலபமான விஷயங்களும் இதில் பகிரப்படும்” என்கிறார், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெய்சன் ராஜ்குமார். மேலும் தொடர்ந்தவர்….
“கல்வி அறிவை வளர்ப்பதோடு, எல்லா மாணவர்களுக்கும் தேவையான கல்வி நிதி உதவிகளையும், இந்த ஆப்பில் பெற முடியும். ‘பிக் பேங்க் ஸ்காலர்ஷிப்’ என்ற பெயரில் கல்வி உதவி வசதி, இந்த ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. எங்களோடு கைகோர்த்திருக்கும் கல்லூரி நிறுவனங்கள், இந்த ஆப்பில் இணைந்திருக்கும் பிளஸ்-2 மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தில் சலுகை வழங்க உள்ளனர்.
மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப கல்லூரி கட்டணத்தில் சலுகைகளை, சம்பந்தப்பட்ட கல்லூரிகளே வழங்க உள்ளனர். அதற்கு அதீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. சராசரி மதிப்பெண் பெற்றிருந்தாலும், அதற்கேற்ப கல்வி கட்டண சலுகை வழங்கப்படும். குடும்ப பின்னணி, மாணவர்களின் கல்வி ஆர்வம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சலுகைகள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஆன்லைன் நிகழ்வுகள் டிசம்பர் 4-ந் தேதி தொடங்க இருக்கிறது. அதனால் கே-சேது ஆப், தமிழக மாணவர்களுக்கு பலவழிகளில் உதவ இருக்கிறது. கூடவே உயர்கல்வி பற்றிய வழிகாட்டுதலையும் வழங்க இருக்கிறது.” என்றார்.