தேவையான பொருட்கள்
கோவா – 1 கப்,
சர்க்கரை – ¼ கப்,
மாம்பழ விழுது – ½ கப்,
ஏலக்காய் பொடி – சிறிதளவு,
சிறிதளவு நெய்,
குங்குமப்பூ – சிறிதளவு
செய்முறை:
அடிகனமான வாணலியை அடுப்பில் சிறு தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு கப் கோவாவைப் போட்டு அது இளகும் வரை ஒன்று இரண்டு நிமிடங்கள் கிளற வேண்டும். கோவா இளகியதும் கால்கப் சர்க்கரையோ அல்லது இனிப்புச்சுவை அதிகம் தேவைப்பட்டால் அரைகப் சர்க்கரையோ சேர்த்துக் கொள்ளலாம்.
சர்க்கரை கரைந்து கோவாவுடன் நன்கு கலந்து வரும்பொழுது மாம்பழ விழுதை அத்துடன் சேர்த்து நன்கு கிளறவும். ஆறிலிருந்து எட்டு நிமிடங்கள் வரை கிளறும் பொழுது இந்தக் கலவையானது கெட்டியாக திரண்டு வரும்.
அப்போது ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூவைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் சிறுதீயில் கிளற வேண்டும்.
சிறிது நேரத்திலேயே மாவின் நிறமும், பதமும் மாறும். இப்பொழுது அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்திற்கு இந்தக் கலவையை மாற்றி வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது சிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும்.
நெய் தடவிய மோதக அச்சில் இந்தச் சிறுஉருண்டைகளை அழுத்தி எடுத்தால் அருமையான மாம்பழ மோதகங்கள் தயார்.
மாம்பழ சீசன் இல்லாத சமயங்களில் மாம்பழ விழுதுகள் கடைகளில் ரெடிமேடாக டப்பாக்களில் விற்பனை செய்வதை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.