தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் – கால் கப்
வடித்த பச்சரிசி சாதம் – 1 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 4 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் )
கடலை பருப்பு – ஒரு தேக்கரண்டி
உளுந்து – ஒரு தேக்கரண்டி
வேர்கடலை – ஒரு தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறு துண்டு
கொத்தமல்லி – சிறிது
பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய், நெய் – தாளிக்க
தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு, முந்திரி – தேவைக்கு ஏற்ப
செய்முறை :
உதிரியாக வடித்த சாதத்தை தட்டில் சாதத்தை கொட்டி பரத்தி உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.
கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
நன்கு ஆறிய சாதத்தை தாளித்த தேங்காய் கலவையுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சுவையான வேர்கடலை – தேங்காய் சாதம் தயார்.