சரும பராமரிப்பு என்பது இரவு தூங்கும் போதும் செய்யகூடிய ஒன்று. அப்படி செய்தாலே முகத்தில் இயல்பான அழகை பெற்றுவிடமுடியும்.
முகம் அழகாக வைத்திருக்க விரும்புபவர்கள் அழகு பராமரிப்பை மட்டும் செய்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் முகத்தை இயற்கையாக பராமரிப்பதும் கூட முக்கியமானது. தினசரி மேக் அப்
சாதனங்கள், வாரம் அல்லது மாதம் இருமுறை ஃபேஸ் பேக் என்று திட்டமிட்டு பராமரிப்பு செய்தாலும் சருமத்தை இயற்கையாகவே அழகாக வைத்துகொள்ளும் பராமரிப்பும் செய்ய வேண்டும்.இல்லையெனில் எவ்வளவு தான் மேக் அப் போட்டாலும் முக அழகு எல்லாமே தற்காலிகமானதாகத்தான் இருக்கும். நிரந்தரமாக அழகை பெறுவதற்கு சருமத்துக்கு என்ன பராமரிப்பு தேவை. குறிப்பாக இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு சருமத்துக்கு செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்க்கலாம்