தேவையான பொருள்கள்
அரிசி – 1 கப்
சிறு பயறு – அரை கப்
வெங்காயம் – 1
இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1 நீளவாக்கில் அறிந்தது
தக்காளி – 1 சிறிய அளவு
பட்டாணி – 1 தேக்கரண்டி
அறிந்த குடை மிளகாய், கேரட் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய்த் தூள் – அரை தேக்கரண்டி
கொத்தமல்லி, உப்பு, தண்ணீர் – தேவையான அளவு
நெய் – 2 தேக்கரண்டி
பட்டை – 1
கிராம்பு – 1
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 1 சிட்டிகை
செய்முறை
அரிசி, பருப்பு நன்றாக கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சீரகம் போட்டு பொரித்தவுடன், பெருங்காயம் சேர்க்கவும்.
அடுத்து அதில் அறிந்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காய, பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதங்கியதும், இஞ்சி-பூண்டு சேர்த்து வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்க வேண்டும்.
இதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பட்டாணி, குடமிளகாய், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
காய்கறிகள் சற்று வதங்கிதும் இதனுடன் சிறுபயறு, அரிசி சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் வந்ததும் நிறுத்தி விடலாம்.
இறக்கியதும் கொத்தமல்லி தூவி கலந்து பரிமாறவும்.