சமைக்க தேவையானவை
வேர்க்கடலை – 1 கப்,
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு,
இஞ்சி துருவல் – அரை டீஸ்பூன்,
சீரகம், சோம்பு – தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேர்கடலையை ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
முதலில் ஒரு மணி நேரம் ஊற வைத்த வேர்க்கடலையை உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்கவும்.
எண்ணெயை சூடாக்கி, சீரகம், சோம்பு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.
இதனுடன் இஞ்சித் துருவல், வெந்த வேர்க்கடலை சேர்க்கவும்.
நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
வேர்க்கடலை சுண்டல் தயார்