Bathing-to-regulate-blood-flow_ரத்த ஓட்டத்தை சீராக்கும் குளியல்

ரத்த ஓட்டத்தை சீராக்கும் குளியல்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பரபரப்பான இன்றைய சூழலில், குளிப்பது என்பது பலருக்கு தினசரி சடங்காகவே உள்ளது. ஆனால் சிலருக்கு தான் குளிப்பதன் முக்கியத்துவம் தெரியும். குளிக்க வேண்டுமே, என்ற சலிப்புடன் பலர் தினமும் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொள்கின்றனர். இத்தோடு குளியல் முடிந்தது என்று நினைக்கின்றனர்.

உடலில் தண்ணீர் ஊற்றிக் கொள்வது நல்லது. ஆனால் அது மட்டும் குளியல் இல்லை. குளிப்பதால் 2 நன்மைகள் உள்ளன. உடலை சுத்தமாக்குவதுடன், ரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்கிறது. உடலில் குளிர்ந்த நீர் பட்டவுடன் சிலிர்ப்பு ஏற்படுகிறது. ரத்தம் வேகமாக ஓடுகிறது.

நம்முடைய தோலில், லட்சக்கணக்கான நுண்துளைகள் உள்ளன. இதன் வழியாக தோல் சுவாசிக்கிறது. தோலில் உள்ள துளைகள், தூசு மற்றும் அசுத்தங்களால் அடைக்கப்பட்டால் நுரையீரல் அதிக வேலையை செய்ய தூண்டப்படும். இதனால் மயக்கம் ஏற்படும். துளைகள் அடைபடுவதால் வியர்வையும் வெளியேறாமல் ரத்தில் இருந்து வெளியேறும் அசுத்தங்கள் உடலிலேயே தங்கி விடும்.

தோல் துளைகள் மூடப்படுவதால் மனிதனின் ஆரோக்கியம் பாதிப்படையும். தினமும் வெந்நீரில் குளிக்கக்கூடாது. அப்படி குளிக்கும் பட்சத்தில் உடல் சோர்வு அடையும். செரிமான சக்தியை குறைத்து விடும். வாரத்தில் 2 நாட்கள் வெந்நீரில் குளிப்பது போதுமானது. சாப்பாட்டுக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னரோ அல்லது சாப்பாடு முடிந்து 3 மணி நேரத்துக்கு பிறகோ குளிப்பது நல்லது.

Related Posts

Leave a Comment

Translate »