தேவையான பொருட்கள்
வெள்ளை பூசணிக்காய் – 200 கிராம்
தக்காளி – ஒன்று
கேரட் – இரண்டு டீஸ்பூன்
மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
சீரக தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
வெள்ளை பூசணிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய வெள்ளைப் பூசணிக்காய், தக்காளி, கேரட்டை விழுதாக அரைத்து கொள்ளவும். தேவைபட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின், ஒரு கிண்ணத்தில் ஊற்றி மிளகு தூள், சீரக தூள் தூவி பரிமாறவும்.
உடலுக்கு குளுர்ச்சியான சூப் ரெடி.