Facial-Yoga_முதுமையைத் தாமதமாக்கும் ஃபேஷியல் யோகா

முதுமையைத் தாமதமாக்கும் ஃபேஷியல் யோகா

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மீன் போன்று சிரியுங்கள் (Smiling Fish)

மெல்லிய புன்னகையோடு, கன்னத்தை உள்ளே இழுத்துக்கொள்வது போலச் செய்யவேண்டும். உதட்டை மீன் போன்று குவித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தநிலையில் சில விநாடிகள் வரை இருக்கலாம்.

வானத்துக்கு முத்தம் கொடுங்கள் (Blow kisses)

தலையைப் பின்புறமாகச் சாய்த்து, வானத்தை நோக்கிப் பாருங்கள். இப்போது, உதட்டைக் குவித்து, முத்தம் கொடுப்பதுபோல வைக்க வேண்டும். இதேநிலையில் சில நொடிகள் இருக்கலாம். பிறகு, பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். சிறிது இடைவெளி விட்டு இந்தப் பயிற்சியை 10 முறை செய்யலாம்.

வாய் கொப்பளிக்கலாம் (Gargle)

காற்றை, வாய்க்குள் இழுத்து வைத்துக்கொண்டு உதட்டைக் குவிக்க வேண்டும். இப்போது, காற்றை ஒரு கன்னத்தில் இருந்து மறு கன்னத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். இதேபோல் மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி கிட்டத்தட்ட நாம் வாய்க் கொப்பளிக்கும் செயல்போல் இருக்கும். இதேபோன்று தொடர்ந்து 10 முறை செய்யலாம்.

பப்பெட் ஃபேஸ் (Puppet Face)

புன்னகைத்த நிலையில் கைகளைக் கன்னங்களின்மேல் வைக்க வேண்டும். இப்போது முகத்தின் மீது கைவைத்து மென்மையாக அழுத்தி மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். இந்தப் பயிற்சியை உதட்டுக்கு மேல் மட்டும்தான் செய்ய வேண்டும். இதை 10 விநாடிகள் வரை செய்யலாம்.
மெல்ல மெல்லப் புன்னகைக்கலாம் (The Sphinx Smile)

சாதாரணமாக முகத்தை வைத்துக் கொள்ளவேண்டும். மெல்ல மெல்லப் புன்னகை செய்ய வேண்டும். கண்கள் சாதாரணமாக இருக்கட்டும். இதேபோல், ஐந்து முறை செய்யலாம்.

ஆச்சர்யப்படுத்துங்கள் (Surprise Me)

சாதாரணமாக முகத்தை வைத்துக் கொள்ளவேண்டும். இப்போது, ஆச்சர்யப்படுவதுபோல் முகத்தின் பாவனையை மாற்ற வேண்டும். மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இதேபோல் மாறி மாறி ஐந்து முறை செய்யலாம்.

பலன்கள்: முகத்தில் உள்ள சதைகளைக் குறைக்க உதவுகிறது. முகத்தசைகளில் ரத்த ஓட்டம் சீராகும். களையான முகஅமைப்புக்கு உதவும். கன்னங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். கன்னத்தில் உள்ள தசைகளில் இயக்கங்கள் ஏற்பட்டு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

Related Posts

Leave a Comment

Translate »