peas-stuffed-Poori-Green-Peas-Puri_பட்டாணி ஸ்டஃப்டு பூரி

பட்டாணி ஸ்டஃப்டு பூரி

by admin

தேவையான பொருட்கள் :


மைதா மாவு – 1 கப்ரவை – 2 டேபிள்ஸ்பூன்தயிர் – சிறிதளவுபச்சை பட்டாணி – 1 கப்மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்சீரகத்தூள் – 1 டீஸ்பூன்மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்சர்க்கரை – அரை டீஸ்பூன்உப்பு, எண்ணெய் – தேவைக்கு


செய்முறை:

பட்டாணியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். 
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவையுடன் சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும். 
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த பட்டாணி கலவையை கொட்டி பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். 
அதனுடன் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கி இறக்கவும். 
மாவு கலவையை பூரிகளாக தேய்த்து அதனுள் பச்சை பட்டாணி பூரண கலவையை வைத்து மூடி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறலாம்.
சூப்பரான பட்டாணி பூரி ரெடி.

Visits:

Related Posts

Leave a Comment

Translate »