ladies-start-small-business_பெண்களுக்கு கொரோனா கற்றுக்கொடுத்த கைத்தொழில்

பெண்களுக்கு கொரோனா கற்றுக்கொடுத்த கைத்தொழில்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் பலரது பொருளாதாரம் கேள்விக்குறியானது. கொரோனா ஊரடங்கு மக்களின் வாழ்க்கை நடைமுறைகளையும் மாற்றியது. இந்த சூழ்நிலையில் தான் கைத்தொழிலில் ஈடுபடுவதும் அதிகரித்தது. அதாவது முககவசம், கிருமி நாசினி தயாரித்தலில் ஈடுபட தொடங்கினர்.
நமது கடலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் இதன் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு தற்போதும் அதன் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். முக கவசம் தயாரிக்க தேவையான துணிகளை பெற்று அதனை வடிவமைத்து பெண்கள் ஒன்று சேர்ந்து அதனை தயாரித்தனர். இதேபோல கிருமி நாசினி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்று, அதனை எவ்வாறு தயாரிப்பது என பயிற்சி பெற்று மொத்தமாக தயாரிக்க தொடங்கினர்.
பொதுவாக அலங்கார பொருட்கள், உணவு வகைகள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வந்தவர்களுக்கு முககவசம், கிருமி நாசினி தயாரித்தலும் ஒரு கைத்தொழிலாக அமைந்தது. இதன் மூலம் கொரோனா ஊரடங்கில் அவர்களுக்கு ஓரளவு வாழ்வாதாரத்திற்கான வருமானம் கிடைத்தது.

தற்போதும் அவர்களுக்கு வாழ்வாதாரமாக இந்த முககவசங்கள், கிருமிநாசினி விற்பனை அமைந்துள்ளது. இதேபோல தையற் தொழிலாளிகளும் முககவசம் தயாரித்து விற்பனையில் ஈடுபட தொடங்கி உள்ளனர். இன்றும் சாலையோரங்களில் முக கவசங்களை பலரும் விற்பனை செய்து வருவதை காணமுடிகிறது.
பொதுவாக முக கவசங்கள் மருத்துவமனை வட்டாரத்தில் மட்டும் அணிவது வழக்கம். அதேபோல நோயாளிகள் தொற்று ஏற்படாமல் இருக்க அணிவது உண்டு. ஆனால் இந்த கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முககவசம் அணிவது கட்டாயம் என்ற சூழலால் சாலையோரங்களில் முக கவசங்கள் விற்பனையும் ஒரு தொழிலாக உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment

Translate »