தேவையான பொருட்கள்
பன்னீர் – 100 கிராம்
பாஸ்மதி அரிசி – 1 கப்
கேரட் – 20 கிராம்
பீன்ஸ் – 20 கிராம்
வெங்காயம் – 1
பூண்டு – 10 பல்
எண்ணெய் – 2 ஸ்பூன்
தேவையான அளவு – உப்பு
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
மிளகு தூள் – 2 ஸ்பூன்
வெங்காயத்தாள் – சிறிதளவு
செய்முறை
பாஸ்மதி அரிசியை முக்கால் பாகம் வேகவைத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.
பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கேரட், பீன்ஸ், வெங்காயத்தாள், வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய பூண்டை வதக்கவும் .
அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
அடுத்து நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்
தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்… பின்னர் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்….
கடைசியாக வடித்த சாதம் சேர்த்து நன்கு கலந்து வெங்காய தாள் தூவி மீண்டும் ஒரு முறை நன்கு கலந்து சூடாக தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்…..
சூப்பரான வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ் ரெடி.