Cell-phone-reduces-memory_நினைவாற்றலை குறைக்கும் செல்போன்

நினைவாற்றலை குறைக்கும் செல்போன்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தினமும் பலமணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தால் ஞாபகசக்தி குறைந்து விடும் என்று இங்கிலாந்து ஆய்வில் எச்சரிக்கப்பட்டு உள்ளது. செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவோரிடம் ஆன்லைனில் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் வெளியான முடிவுகள், தினமும் பலமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் பாதிப்பேருக்கு தங்கள் வாழ்க்கை துணையின் நம்பர் கூட மறந்து விடுகிறது.

10-ல் 7 பேருக்கு நெருங்கிய நண்பரின் போன் நம்பரை சட்டென நினைவுக்கு கொண்டு வர முடிவதில்லை. 51 சதவீதம் பேருக்கு பெற்றோரின் போன் நம்பர் ஞாபகத்தில் இருப்பதில்லை. தொடர்ந்து செல்போன் பயன்படுத்துபவர்களில் 10-ல் 9 பேருக்கு திடீரென கேட்டால் முக்கிய நம்பர்களை உடனடியாக சொல்ல முடிவதில்லை. 5 முதல் 10 வினாடிகள் யோசித்து தான் சொல்ல முடிகிறது.

இதன் மூலம் கண்ணை கவரும் அழகிய இந்த செல்போன் ஆபத்தாக மாறி நமது நினைவாற்றல் குறைவதை காட்டுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. இதுபற்றி நிபுணர்கள் கூறுகையில், “நவீன தொழில் நுட்பங்களால் அதிக வசதிகள் ஏற்பட்டாலும் நினைவாற்றல் குறைய காரணமாகின்றன. அவசர நேரத்தில் முக்கிய பெயர்கள், நம்பர்கள் நினைவுக்கு வராது. இதற்கு கோல்டு பிஷ் மெமரி என்று பெயர்.

இதனால் அவசர, ஆபத்தான சூழ்நிலையில் குடும்பத்தினர், நண்பர்களின் போன் நம்பர்கள் மறந்து விடும் என்றனர். இதற்கு முன் நடந்த ஆய்வு ஒன்றில் சராசரியாக ஒவ்வொருவரும் 5 முக்கிய போன் நம்பர்கள், பாஸ்வேர்டுகள், 2 வாகன நம்பர் பிளேட்டுகள், 3 செக்யூரிட்டி அடையாள எண்கள், 3 வங்கி கணக்கு எண்களை தினசரி வாழ்க்கையில் நினைவில் கொள்கின்றனர். அதற்கு மேல் மறதி ஏற்படுகிறது என்று கூறப்பட்டது.

Related Posts

Leave a Comment

Translate »