தேவையான பொருட்கள்:
மட்டன் கீமா – 1 கிலோ
பழுக்காத பப்பாளி விழுது – 4 டேபிள் ஸ்பூன்
வெங்காய பேஸ்ட் – 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மட்டன் கீமாவை நன்கு நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பழுக்காத பப்பாளி விழுது, வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மல்லி தூள், மிளகாய் தூள், கடலை மாவு, ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்க வேண்டும்.
பின்பு அதனை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து, அதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ளதைப் போட்டு, மட்டன் வெந்து, முன்னும் பின்னும் நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து துண்டுகளையும் பொரித்து எடுத்தால், சுவையான லக்னோ ஸ்டைல் கலூட்டி கபாப் ரெடி!!!