Couple-Hug_கவலை நீங்குவதற்கு கட்டிப்பிடியுங்கள்

கவலை நீங்குவதற்கு கட்டிப்பிடியுங்கள்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ம்பதியர் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அரவணைப்பதன் மூலம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டிப்பிடிப்பது மன அழுத்தத்தை போக்க வழிவகை செய்யும் என்பதும் தெரியவந்துள்ளது. வாழ்க்கை துணையுடன் செலவிடும் நேரம் மகிழ்ச்சிக்குரியதாகவும், அந்த மகிழ்ச்சி பின் தொடர்வதற்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கும் விதமாகவும் ‘கட்டிப்பிடித்தல்’ பழக்கம் அமைந்திருக்கிறது. கட்டிப்பிடிப்பதால் மேலும் சில நன்மைகளும் இருக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் அரவணைப்புக்கு இருக்கிறது. ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்கும்போது ஆக்ஸிடோஸின் ஹார்மோன் அதிக அளவு வெளிப்படும். நோய் தொற்றை எதிர்த்து போராட உதவும் ஹார்மோன்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

கட்டிப்பிடிப்பது நிம்மதியான தூக்கத்துக்கும் வழிவகுக்கும். ஒருவருக்கொருவர் நேசத்துடன் அரவணைக்கும்போது மூளையின் செயல்பாடுகளில் சுறுசுறுப்பு மிகும். மூளை செல் களுக்கு பாதுகாப்பான சூழலும் உண்டாகும். 10 நிமிடங்கள் கட்டிப்பிடிப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவும். நன்றாக தூக்கத்தையும் வரவழைக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு கட்டிப்பிடித்தல் பலன் கொடுக்கும். நிம்மதியாக தூங்கி எழ வழிவகுக்கும்.

கட்டிப்பிடிக்கும்போது துணையுடனான நெருக்கமும், பாசமும் அதிகரிக்கும். அதற்கு ஆக்ஸிடோஸின் ஹார்மோன் வழிவகை செய்யும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் உணர்வையும், இணக்கமான போக்கை கடைப்பிடிக்கும் தன்மையையும் உண்டாக்கும்.

ஆக்ஸிடோஸின் ஹார்மோன் நாள்பட்ட வலியை குறைக்கவும் உதவும். பொதுவாக ஆக்ஸிேடா ஸின் ஹார்மோன் குறைவாக உள்ளவர்கள் நாள்பட்ட வலியால் அவதிப்படுவார்கள். கட்டிப்பிடிப்பதன் மூலம் ஆக்ஸிடோஸின் ஹார்மோன் அதிகரிப்பதால் உடல் நலனும் மேம்படும்.

Related Posts

Leave a Comment

Translate »