தேவையான பொருட்கள்:
சிக்கன்- 500 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 5
தயிர் – 1/2 கப்
எலுமிச்சை பழம் – 1/2
கடுகு – 1 1/2 தேக்கரண்டி
வர மல்லி – 2 தேக்கரண்டி
மிளகு – 2 தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
வர மிளகாய் – 4
துருவிய தேங்காய் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 1/2 மூடி எலுமிச்சை சாறு, 1/2 கப் தயிர், 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளலாம்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முழு தனியா, முழு மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.
தேங்காய் பொன்னிறமாக வறுப்பட்டதும் இதனை ஆற வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்.
அடுத்து அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போன பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்குங்கள்.
தக்காளி குழைய வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.
இந்த சமயத்தில் நாம் அரைத்து வைத்த மசாலா பேஸ்டை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
மசாலா ஐந்து நிமிடங்கள் வதங்கிய பின் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
இதனோடு 1/2 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் நன்றாக வேக வைக்க வேண்டும்.
கடைசியில் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சூப்பரான குண்டூர் சிக்கன் மசாலா ரெடி.