தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 1 கப்
பொரிகடலை மாவு – ½ கப்
வெல்லம் – ½ கப்
ஏலக்காய்த் தூள் – 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
வெள்ளை எள்ளு – 2 தேக்கரண்டி
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு
செய்முறை:
முதலில் ராகி மாவை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
ராகி மற்றும் பொரிகடலை மாவை நன்றாக சலித்துக் கொள்ளவும்.
வெல்லத்தை ½ கப் தன்ணீரில் கரைத்து வடிகட்டி, குமிழ்ப் பதத்தில் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
சலித்த மாவுடன் தேங்காய்த் துருவல், எள்ளு மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இத்துடன் வெல்லப் பாகை சிறிது சிறிதாகக் கலந்து சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பின் மிக மெல்லிய தட்டைகளாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயைக் குறைத்து மிதமான சூட்டில் தட்டைகளை போட்டு பொரித்தெடுக்கவும்.
சத்தான, சுவையான ராகி இனிப்பு தட்டை ரெடி.