How-to-clean-Born-Baby-ears_பச்சிளம் குழந்தைகளின் காதுகளை சுத்தம் செய்வது எப்படி

பச்சிளம் குழந்தைகளின் காதுகளை சுத்தம் செய்வது எப்படி?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

குழந்தைகளின் காதுகள் மிகவும் சென்சிடிவ்வான உறுப்பு. காது வலி வந்தால்தான் தெரியும். அந்த வலி மிகவும் கொடுமையானது என்று. காதைத் தடவி தடவி குழந்தை அழுதால், காதில் என்ன பிரச்சனை எனக் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிக முக்கியம்.

காதுகளை சுத்தம் செய்ய டிப்ஸ்…

முதலாவதாக, தெரிந்து கொள்ளுங்கள். பட்ஸ், ஹேர் பின், கொண்டை பின் என எதுவும் குழந்தைக்கு பயன்படுத்தவே கூடாது. இதெல்லாம் குழந்தையின் சின்ன காதுகளைப் பாதிக்கும். எந்தவித கூர்மையான பொருட்களையும் குழந்தையின் காது அருகில் தயவு செய்து கொண்டு செல்லாதீர்கள். டவல் (துண்டு), ஒரு முனையை எடுத்துக்கொண்டு அதை மெல்லியதாக உருட்டி, குழந்தையின் காதில் விட்டு ஈரத்தை எடுக்கலாம்.

குழந்தை குளித்த பின் செய்ய வேண்டிய முறை இது. குழந்தையின் காது அழுக்காக இருந்தால், துணியை ஈரம் செய்துவிட்டு காதை லேசாகத் தொட்டு துடைத்து எடுக்கவும். சோப் பயன்படுத்தவே கூடாது. காதுகளின் உள் மடலையும் வெளி காதையும் மென்மையான, ஈரமான துணியால் துடைத்து எடுக்கவும். ஒவ்வொரு முறை குழந்தை குளித்த பின்னும் துண்டால் காதின் ஈரத்தை ஒத்தி ஒத்தி எடுக்கலாம்.

குழந்தை காதில் ஏதோ அசௌகரியமான உணர்வு உணர்ந்தாலோ, காதில் வலி இருப்பது போல அழுதாலோ மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். காதை சுத்தம் செய்யும்போது, குழந்தை கதகதப்பான உணர்வை உணர வேண்டும். ஆதலால், அடர்த்தியான, துணியால் குழந்தையை போர்த்திக்கொள்ளுங்கள். சில குழந்தைகளுக்கு இயல்பாகவே அதிகமாக வாக்ஸ் காதில் உருவாகும். அவர்களை கட்டாயமாக காது மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பிக்கவும்.

Related Posts

Leave a Comment

Translate »