Women-get-married-to-increase-self-confidence_பெண்களே தன்னம்பிக்கை அதிகரிக்க திருமணம் செய்து கொள்ளுங்கள்

பெண்களே தன்னம்பிக்கை அதிகரிக்க திருமணம் செய்து கொள்ளுங்கள்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

திருமண வயதை எட்டிய மகனிடம் தாயார், பெண்களின் போட்டோக்களை காட்டி ‘இவர்களில் எந்த பெண்ணை உனக்கு பிடிக்கிறது என்று சொல். அந்த பெண்ணின் பெற்றோரிடம் பேசி உனக்கு திருமணம் செய்துவைக்கிறேன்’ என்பார். சிலர் தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு பெண்ணை தேர்வு செய்வதில் முனைப்பு காட்டத் தொடங்கிவிடுவார்கள். பலர், ‘இப்போது என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நான் திருமணம் செய்துகொண்டால் எனக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது?’ என்று எதிர் கேள்வி கேட்பார்கள்.

இப்படி எதிர் கேள்வி கேட்கும் இளைஞர்களுக்காகவே ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டு, அதில் ‘ஆண்கள் திருமணம் செய்துகொண்டால் அவர்களிடம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதை தொடர்ந்து அவர்கள் வாழ்க்கையும் பிரகாசமாகும்’ என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

வெற்றி பெற்ற ஆண்களுக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்ற உண்மையை இந்திய பெண்கள் ஏற்கனவே மெய்ப்பித்து காட்டியிருந்தாலும், இப்போதுதான் அந்த உண்மை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

எப்போதுமே பெண்கள் மனோதிடம், துணிச்சல், ஆன்மபலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மனப்பூர்வமான ஜோடியாக அவள், கணவரோடு இணையும்போது அவளது சக்தியும், ஆலோசனை யும் கணவருக்கு கிடைக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் ஆண்கள் வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். இந்த உண்மையை இளைஞர்களிடம் புரியவைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. புரிந்துகொண் டால், அவர்கள் திருமணம் செய்துகொண்டு, மண வாழ்க்கையை வெற்றிகர மாக அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றியை நோக்கி நகரத் தொடங்கி விடுவார்கள்.

ஆனால் மணவாழ்க்கையில் நிறைய பிரச்சினை களும் இருக்கத்தானே செய்யும்?

உண்மைதான்! பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் வாழ்க்கை என்பது பிரச்சினை களை கடந்துவந்து வெற்றிகாண்பதுதான். பிரச்சினைகளை கடந்து வெற்றிபெறும்போதுதான் ஒவ்வொருவரிடமும் இருக்கும் முழு பலமும் தெரியும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் ஆக முடியும். அதே நேரத்தில் இன்னொரு முக்கிய உண்மை என்னவென்றால் பிரச்சினை என்பது எப்போதும் இருக்கும். திருமணமானாலும் இருக் கும். திருமணமாகாவிட்டாலும் இருக்கும். திருமணத்திற்கு பின்னால் வரும் பிரச்சினைகளை மனைவி உதவியோடு முறியடிக்கலாம் என்பது தான் புதிய செய்தி.

திருமணத்திற்கு பின்னால் பலர் சாதனையாளர் களாக உருவெடுத்திருக்கிறார்கள். புகழ்பெற்ற தொழிலதிபர் திருபாய் அம்பானி தன்னுடைய வாழ்க்கை சரித்திரத்தில், தன் மனைவி கோகிலா தனக்கு கொடுத்த ஊக்கத்தையும், உற்சாகத்தை யும் பற்றி எழுதியிருக்கிறார். ஒவ்வொரு தோல்வி யிலும் தன்னை தூக்கி நிறுத்திய கோகிலாதான் பின்பு தனக்கு கிடைத்த வெற்றிகளுக்கெல்லாம் காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திருமணத்திற்கு பின்பு கணவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் மனைவிக்கு பெரும் பங்கு உள்ளது. அமிதாப்பச்சன், ஜெயபாதுரியை திருமணம் செய்த பின்பு வெற்றி சிகரத்தை தொட்டார். திருமணத்திற்கு பிறகுதான் ஷாருக் கான் படங்கள் சூப்பர் ஹிட் ஆயின.

இந்தியாவில் இப்படி ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்க, அமெரிக்காவிலும் நிலை அதுதான். பில்கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த போது உலகமே அவரை வியந்து பார்த்தது. பின்பு அவர் தனது உதவியாளர் மோனிகா லெவின்ஸ்கி யுடன் தகாத உறவு வைத்ததும், உலகத்தின் முன்னால் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. மிகுந்த உயரத்திலிருந்து விழுபவர்கள் உயிர்பிழைப்பது கடினம். அதுபோன்றுதான் பில்கிளிண்டனின் மனநிலையும் ஆனது. உலகமே அவரது அந்தரங்கங்களை வெளிப்படுத்தி, அவரை சொல்லமுடியாத வேதனைக்கு உள்ளாக்கி யது. விரக்தியின் விளிம்பில் நின்ற அவரை மனைவி ஹிலாரி கிளிண்டன் ஆறுதல்படுத்தினார். அமைதிப்படுத்தினார். தன்னம்பிக்கை கொடுத்தார். அவரை அந்த நிலையில் இருந்து மீண்டெடுத்து, இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார். ‘அது என் கணவரின் புகழை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. அதில் சிறிதும் உண்மையில்லை’ என்று வாதாடினார்.

மனைவியின் இந்த பேச்சு கிளிண்டனுக்கு ஆறுதலை கொடுத்தது. அடுத்து கணவருக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் விதத்தில் பேசினார். ‘ஒருவேளை அந்த குற்றச்சாட்டு உண்மையாகவே இருந்தாலும் நான் என் கணவரை விட்டு விலகிப் போகமாட்டேன். இது உறுதி..’ என்றார். மனைவி கொடுத்த பலத்தில் கிளிண்டன் எழுந்து நின்றார். பேச்சோடு நில்லாமல், கணவரோடு தோள் கொடுத்து நின்றார். அந்த பலத்தில் கிளிண்டன் விரைவாக இயல்பு நிலைக்கு வந்து, மீண்டும் அதிகாரத்தோடு உலாவரத் தொடங்கினார். இப்போது மனைவி சொல்லே மந்திரம் என்று அவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றுதான், இந்த தன்னம்பிக்கை ஆய்வை மேற்கொண்டுள்ளது. திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் திருமணமான இளைஞர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். பல்வேறு கட்டங்களாக, பல நாட்களாக அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ‘திருமணமாகாதவர்களைவிட திருமணமான ஆண்கள் மிகுந்த தன்னம்பிக்கை யோடு வாழ்கிறார்கள். மனோபலத்துடன் இருக் கிறார்கள்’ என்று கண்டறிந்திருக்கிறார்கள். ‘திருமணமானவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். அர்த்தத்தோடு பயனுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள்’ என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் நடந்த இன்னொரு ஆய்வில் ‘திருமணமானவர்கள் பலவித வியாதிகளிலிருந்து விரைவில் மீண்டுவிடுகிறார்கள்’ என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

Related Posts

Leave a Comment

Translate »