தேவையான பொருட்கள் :
கேரட் – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
முட்டை கோஸ் – 50 கிராம்
கோதுமை மாவு – 1 கப்
சீரகம் – 2 தேக்கரண்டி
அரிசி மாவு – கால் கப்
கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு,
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2 ,
எண்ணெய், உப்பு – தேவைக்கு
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, கேரட், பீன்ஸ், முட்டை கோஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவில் அரிசி மாவை கலந்து, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
அதில் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சீரகம், உப்பு போன்றவைகளை சேர்த்து, தோசைமாவு பக்குவத்திற்கு கலக்கிக்கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் இந்த மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான வெஜ் கோதுமை தோசை ரெடி.