தேவையான பொருட்கள் :
வாளை மீன் – ½ கிலோ
சின்ன வெங்காயம் – ¼ கிலோ
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 12
தேங்காய் – அரை மூடி
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்.
சோம்பு – 2 டீஸ்பூன்
கசகசா – 2 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை :
வாளை மீனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2 ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.
10 பச்சை மிளகாய், கசகசா, சோம்பு சேர்த்து மையாக அரையுங்கள்.
அடுப்பில் மண்சட்டியை வைத்து, அது சூடானதும் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின்னர் 2 பச்சை மிளகாயை போட்டு வதக்குங்கள்.
அடுத்து சின்ன வெங்காயத்தை போட்டு சிறிது உப்புச் சேர்த்து வதக்குங்கள்.
எண்ணெய் பிரிகையில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
அடுத்து தக்காளியை போட்டு மேலும் சிறிது உப்புச் சேர்த்து வதக்குங்கள். அது வதங்கும் நேரத்தில், அரைத்த மசாலாவை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
இப்போது, கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் வாளை மீனைச் சேர்த்து, இன்னொரு 10 நிமிடம் கொதிக்க விட்டால், புளி சேர்க்காத வாளை மீன் குழம்பு ரெடி.