மிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா

மிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மாதுளை விதைகள்

பொதுவாகவே மாதுளைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது. அவை உதட்டிற்கும் நல்லது என்பது அநேகருக்கு தெரிந்திருக்கும். இந்த மாதுளை பழத்தின் விதைகளை பயன்படுத்தி, உதட்டிற்கு இயற்கை நிறத்தையும், மிருது தன்மையையும் பெற்றிட முடியும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். மாதுளை விதைகளை பயன்படுத்தி, லிப் ஸ்கரப் தயாரித்து பயன்படுத்தவும். இதனை பயன்படுத்துவதன் மூலம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதட்டிற்கு இயற்கை பொலிவை வெறும் 10 நிமிடங்களிலேயே வழங்கி விடும்.

மாதுளை லிப் ஸ்கரப்

முதலில், 2 டேபிள் ஸ்பூன் மாதுளை பழ விதைகளை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதனோடு, சிறிது மில்க் க்ரீம் சேர்த்து நன்கு கெட்டியாக வரும் வரை கலக்கவும். தயாரித்த அந்த கலவையை உதட்டில் தடவி 10 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர், சுத்தமான துணி கொண்டு துடைத்திடவும். இப்படி செய்திட, உதடு மிகவும் பளபளப்பாக, பிங்க் நிறத்தில் மாறிடுவதை நீங்களே பார்க்கலாம். வேண்டுமென்றால், இரவு முழுவதும் கூட உதட்டில் இதனை தடவி வைத்திருக்கலாம்.

மிருதுவான உதட்டை பெற உதவும் சர்க்கரை பொதுவாகவே, அனைவரும் வாய் வழிவாக மூச்சு விட தான் செய்வோம். அப்படி வாய் வழியாக மூச்சு விடும் போ,து, உதடு வறண்டு, வெடிப்பு ஏற்படுவது சகஜம் தான். குறிப்பாக, குளிர்காலத்தில் இந்த பிரச்சனை மிகவும் மோசமாக ஏற்படக்கூடும். வறண்ட காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படும் போது இது ஏற்படும். அதுபோன்ற, தருணங்களில் உதட்டின் மேல் தோலை நீக்க வேண்டியது அவசியம். அதற்கு, சர்க்கரை ஸ்கரப் பயன்படுத்தலாம்.

சர்க்கரை ஸ்கரப்

ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரையை எடுத்து, ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். அதனோடு, அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை லிப் ஸ்கரப்பாக பயன்படுத்தி, உதட்டின் மீது தடவி தேய்க்கவும். இப்படி செய்வதனால், உதட்டின் மேற்பகுதியில் படிந்து இருக்கக்கூடிய இறந்த செல்கள் நீங்கி விடும். ஸ்கரப் செய்ய பிறகு, உதட்டை தண்ணீர் கொண்டோ அல்லது துணி கொண்டோ சுத்தம் செய்திடவும். பின்னர், உதட்டின் மீது சிறிது தேங்காய் தடவி கொள்ளவும். இப்படி செய்வதன் மூலம் உதடு, பிங்க் நிறத்தில், ஜொலிக்கும்.

உதடு பராமரிப்பிற்கு சிறந்தது கற்றாழை ஜெல்

நூற்றுக்கணக்கான சரும பிரச்சனைகளுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்றென்றால், அது கற்றாழை ஜெல் தான். ஜொலிக்கும், மிருதுவான, பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமென்றால், கற்றாழை ஜெல்லை பயன்படுத்துங்கள்.

கற்றாழை லிப் ஜெல்

கற்றாழை செடியில் இருந்து ஒரு இலையை வெட்டி, அதற்கு நடுவே இருக்ககூடிய தசை பகுதியை எடுத்துக் கொள்ளவும். எடுத்த தசை பகுதியை நன்கு மசித்து பேஸ்ட்டாக செய்து கொள்ளவும். அத்துடன், அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தயாரித்த கலவையை, இரவு தூங்குவதற்கு முன்பு உதட்டில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விடவும். காலை எழுந்தவுடன், உதட்டை சுத்தப்படுத்திக் கொள்ளவும். இப்படி செய்வதன் மூலம், உதட்டில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கிடும். இந்த முறையை முயற்சி செய்து பார்த்த பிறகு, உங்கள் உதட்டில் காணப்படும் வித்தியாசத்தை நீங்கள் உணரலாம்.

Related Posts

Leave a Comment

Translate »