Ladies-Finger-Pachadi_நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த வெண்டைக்காய் பச்சடி

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த வெண்டைக்காய் பச்சடி

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருள்கள் :

வெண்டைக்காய் – 100 கிராம்

உப்பு – தேவையான அளவு        

அரைக்க :

தேங்காய் துருவல் – 5 மேஜைக்கரண்டி

தக்காளி -1

பச்சை மிளகாய் – 2 (அல்லது மிளகாய் வத்தல் -2)

சீரகம் – 2 மேஜைக்கரண்டி

சின்ன வெங்காயம்  – 3         

தாளிக்க :

கடுகு – 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் – 3

எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி

கறிவேப்பில்லை – சிறிது

செய்முறை :

வெண்டைக்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  கடுகு, வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கி  வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வெண்டைக்காய் வேகும்  வரை வதக்கவும்.         

பின்னர்  அரைத்த  விழுதை சேர்த்து 1 கப் தண்ணீர்  ஊற்றி கொதிக்க விடவும்.      

தண்ணீர் வற்றியவுடன் இறக்கவும்.

வெண்டைக்காய்  பச்சடி ரெடி.

Related Posts

Leave a Comment

Translate »