Red-chilli-chutney_காரசாரமான காய்ந்த மிளகாய் சட்னி

காரசாரமான காய்ந்த மிளகாய் சட்னி

by admin

தேவையான பொருட்கள் :

வரமிளகாய் – 5 அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி

வெங்காயம் – 1 பெரியது
தக்காளி – 1 பெரியது
புளி  – சிறிது,
பூண்டு – 5 பல்
உப்பு- 1 /2 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை :

வெங்காயம் தோல் உரித்து பெரிதாக வெட்டிக்கொள்ளவும்

தக்காளியைக்கழுவி பெரிதாக வெட்டிக்கொள்ளவும்

வெங்காயம், தக்காளி, உப்பு, புளி, மிளகாய் அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைக்கவும்.

குறிப்பு : மற்றொரு விதம் இந்தக்கலவையை வதக்கியும் அரைக்கலாம்.

வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.

கறிவேப்பிலை, அரைத்த துவையலையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

சுவையான காரசாரமான மிளகாய் சட்னி தயார்.

இது இரண்டு நாட்கள் வரை கெடாதிருக்கும் ஆகையால் சுற்றுலா பயணத்திற்கு கூட எடுத்துச்செல்லலாம்.

Visits:

Related Posts

Leave a Comment

Translate »