Dental-disease-affects-children_குழந்தைகளை தாக்கும் பல் நோயும்... தற்காத்துகொள்ளும் வழிமுறையும்...

குழந்தைகளை தாக்கும் பல் நோயும்… தற்காத்துகொள்ளும் வழிமுறையும்…

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

குழந்தைகளை பொறுத்தவரை மிட்டாய்கள், சாக்லேட், குக்கீஸ்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிடுவது பல் நோய்களுக்கு வழிவகுத்துவிடும். இதனால் பல் நோய்கள் பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளை தாக்கும் பல் நோய்களுக்கான அறிகுறிகள் பற்றியும், அவற்றில் இருந்து தற்காத்துகொள்ளும் வழிமுறை குறித்தும் பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு பற்சிதைவு ஏற்பட உணவு பழக்கம் மட்டுமே காரணம் அல்ல. பல்வலி, பல்லின் நிறத்தில் மாற்றம், ஏதாவது சாப்பிடும்போது அல்லது குடிக்கும்போது வலி ஏற்படுவது, துர்நாற்றம், எதை சாப்பிட்டாலும் கசப்பாக இருப்பது, எதிர்பாராதவிதமாக எடை இழப்பு போன்றவை பற்களில் நோய்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும்.

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் பல் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது. குழந்தைகள் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை விரும்பி சாப்பிட மாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும் சாப்பிட்டு முடிக்க மாட்டார்கள். இனிப்பு பலகாரங்களைத்தான் அதிகம் விரும்புவார்கள். அதனை குறைத்து ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்கும் வழக்கத்தையும் பின்பற்றச் செய்ய வேண்டும்.

தினமும் இருமுறை பல்துலக்குவதற்கும் பழக்கப்படுத்த வேண்டும். இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவுதான் சாப்பிட வேண்டும் என்று வரையறுத்து அதன்படி செயல்பட வைக்க வேண்டும். காலை, மதியம், இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட வைத்துவிட வேண்டும். பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் பற்களின் ஆரோக்கியத்தை காக்கலாம்.

Related Posts

Leave a Comment

Translate »