முகத்துக்கு பூசும் பவுடர் போல ஹேர் டையும் சாதாரண அலங்காரப்பொருட்களில் ஒன்றாக மாறியுள்ளது. நடுத்தர வயதை எட்டிய இளம் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே ஆகியுள்ளது. ஆனால் ஹேர் டையில் ரசாயனக்கலவைகள் இருப்பதால் தலைமுடி உதிர்தல், எரிச்சல் போன்ற பின்விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தால் பலன் ஹேர் டை பயன்படுத்த தயக்கம் கொண்டுள்ளனர்.
ஹேர் டைகளில் பல்வேறு ரசாயனப்பொருட்களில் கலவை இருப்பது என்னமோ உண்மை தான். ஆனால் அவை அனைத்துமே கெடுதல் என்று சொல்லிவிட முடியாது. நாம் பயன்படுத்தும் ஷாம்புவில் கூட சில ரசாயன பொருட்கள் உள்ளன.
* ஒரு ஹேர்டையை பயன்படுத்தும் முன் சிறிய அளவில் உபயோகித்து பார்த்து நமக்கு அது ஏதும் அலர்ஜி அல்லது எரிச்சம் ஏற்படுத்துகிறதா என்று சோதித்து விட்டு பின் உபயோகப்படுத்தலாம்.
* தலைமுடியின் கருப்பு நிறம் சீக்கிரம் மங்கி விடாமல் இருக்க சில வழிமுறைகளை ஹேர் டை பாக்கெட்டுகளில் குறிப்பிட்டு இருப்பார்கள். நாம் அவற்றை சரியாக பின்பற்றினால் மாதமாதம் ஹேர் டை போடுவதை தவிர்க்கலாம்.
* இப்பொழுது நாட்டு மருந்து கடைகளில் மூலிகை ஹேர் டைகளும் விற்பனை ஆகின்றது. ரசாயன ஹேர் டை உபயோகிக்க விரும்பாதவர்கள் இது போன்ற முலிகை ஹேர் டைகளை பயன்படுத்தலாம்.
வெள்ளை முடியுடன் இயற்கை தோற்றத்தில் இருப்பது ஒரு அழகு தான். மிகப்பெரிய ’ஹீரோக்கள் கூட சால்ட் அண்டு பெப்பர் லுககிற்கு மாறிவிட்டார்கள். ஆனால் ஒரு திருமண வரவேற்பு வேலைக்கான இன்டர்வியூ நம்மை விட வயதில் குறைந்தவர்கள மத்தியில் நாம் இருக்கும் போது வயதை குறைத்து காட்டுவதில் தவறில்லை. அதற்கு ஹேர் டை கைகொடுக்கும்.