Somas_கோதுமை மாவில் செய்த வெஜிடபிள் சோமாஸ்

கோதுமை மாவில் செய்த வெஜிடபிள் சோமாஸ்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 3 கப்,

ரவை – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு  – தேவைக்கேற்ப,
எண்ணெய்  – பொரிப்பதற்கு தேவையான அளவு.

மசாலா செய்வதற்கு:

உருளைக்கிழங்கு  – 200 கிராம்,
கேரட் துருவல்  – 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு  – தேவைக்கேற்ப,
ஊறவைத்த பச்சைப் பட்டாணி  – கால் கப்,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள்  – தலா ஒரு சிட்டிகை,
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை  – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம்  – ஒன்று,
பச்சை மிளகாய்  – 2,
எண்ணெய்  – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

கோதுமை மாவு, உப்பு, ரவையுடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, 20 நிமிடம் ஊறவிடவும்.

கழுவி, நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணியுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேகவிடவும்.

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி… நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவலயும் சேர்த்துக் கிளறி, வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் வதக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

பிசைந்த கோதுமை மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக இட்டு… 2 டேபிள்ஸ்பூன் மசாலாவை உள்ளே வைத்து மூடி நன்றாக அழுத்தி, சோமாஸிகளாக செய்யவும்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்து செய்துவைத்த சோமாஸ்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: சோமாஸ் மேக்கரில் சிறிய சப்பாத்தியையும், மசாலாவையும் வைத்து மூடி, அழுத்தி ஓரங்களில் வெளியே வருவதை எடுத்துவிட்டு, உள்ளே இருப்பதை எண்ணெயில் பொரித்து எடுத்தால், அழகிய வளைவுகளுடன் ஓரங்கள் கண்கவரும் விதத்தில் இருக்கும். சோமாஸ் பொரிக்கும்போது அடுப்பை ‘சிம்’மில் வைத்து ஓரங்கள் பிரிந்து விடாதவாறு பார்த்துப் பொரிக்க வேண்டும்.

Related Posts

Leave a Comment

Translate »