venthaya-kali

வெந்தய களி – Vendhaya kali

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மார்பக பால் உற்பத்தியை அதிகரிக்கும்

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தேவையான பொருட்களில் முதலிடத்தை பெறுகிறது வெந்தயம். அதற்கு காரணம் அந்த மசாலாவில் உள்ள டையோஸ்ஜெனின் தான். இது பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க உதவும்.

குழந்தை பிரசவிப்பதை சுலபமாக்கும்

கருப்பைக்குரிய சுருங்குதலை ஊக்குவிக்க வெந்தயம் உதவுவதால், குழந்தை பிறப்பை அது தூண்டும். பிரசவ வழியை குறைக்கவும் இது உதவும். ஆனால் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை – கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை எடுத்துக் கொண்டால், கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் உள்ளது.

பெண்களின் உடல்நல பிரச்சனைகளை குறைக்கும்

வெந்தயத்தில் ஈஸ்ட்ரோஜென் போன்ற குணங்களுடன், டையோஸ்ஜெனின் மற்றும் ஐசோஃப்ளேவோன்ஸ் போன்ற பொருட்கள் உள்ளதால், மாதவிலக்குக்கு முன் ஏற்படும் தாக்கீடுடன் சம்பந்தப்பட்ட வலிகள் மற்றும் உபாதைகளை குறைக்க இது உதவும். மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் காய்ச்சல் உணர்வு, உடல் சூடு மற்றும் மனநிலை மாற்றத்தையும் சாந்தப்படுத்தும். முதன் முதலில் மாதவிடாய் ஏற்படும் பருவத்தில், கர்ப்ப காலத்தில் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். இந்நேரத்தில் உங்கள் உணவில் வெந்தய இலைகளை சேர்த்துக் கொண்டால், போதிய அளவிலான இரும்புச்சத்து கிடைக்கும். ஆனால் அதனுடன் உருளைக்கிழங்குகள் அல்லது தக்காளிகளை சேர்த்து கொண்டால் தான் இரும்புச்சத்து உறிஞ்சுதல் மேம்படும்.

கொலஸ்ட்ராலை குறைக்க வெந்தயம் உதவி செய்கிறது. முக்கியமாக ஐது கொழுப்புப்புரதத்தை குறைக்க உதவுகிறது.

Visits:

Related Posts

Leave a Comment

Translate »