apple-vinegar-using-Method_ஆப்பிள் வினிகரை பயன்படுத்தும்போது கண்டிப்பா இதை மறக்காதீங்க...

ஆப்பிள் வினிகரை பயன்படுத்தும்போது கண்டிப்பா இதை மறக்காதீங்க…

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஆப்பிளில் இருக்கும் சர்க்கரையை நொதிக்க வைத்து ஆப்பிள் வினிகர் தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறை ஆப்பிளை அசிடிக் அமிலமாக மாற்றுகிறது. ஆப்பிள் வினிகர் உடல் எடையை குறைப்பதற்கும், சருமம் சார்ந்த தொற்று நோய்களை தடுப்பதற்கும் உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் ஆப்பிள் வினிகரை உபயோகிக்கலாம். கூந்தலை வலுப்படுத்தலாம். எனினும் ஆப்பிள் வினிகரை பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன.

பல் துலக்கியதும் ஆப்பிள் வினிகர் கலந்த பானங்கள், உணவு பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது. குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும். பல்துலக்கியதும் ஆப்பிள் வினிகரை பயன்படுத்தினால் பற்சிதைவு ஏற்படக்கூடும். பற்களின் எனாமலுக்கு சேதம் ஏற்படக்கூடும்.

இரவில் சாப்பிட்ட பிறகு ஆப்பிள் வினிகரை உட்கொள்ளக்கூடாது. அது உணவு குழாய்க்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும். அதில் இருக்கும் அமிலங்கள் செயல்புரிவதற்கு அரை மணி நேரம் ஆகக்கூடும்.

சாப்பிட்ட பிறகு ஆப்பிள் வினிகரை உட்கொள்வதும் சரியானதல்ல. செரிமானத்தை மேம்படுத்துவதற்கு சாப்பிடுவதற்கு முன்பு பருகுவதுதான் சிறந்தது. குறிப்பாக வெறும் வயிற்றில் உட்கொள்வதுதான் நல்லது.

ஆப்பிள் வினிகரை அதிகம் உட்கொள்வதும் ஆபத்தானது. முதலில் உடலுக்கு ஒத்துக்கொள்ளுமா? ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுமா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஆப்பிள் வினிகரை அதிகம் எடுத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு, வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஆப்பிள் வினிகரை அப்படியே பருகவும் கூடாது. அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் ஆப்பிள் வினிகரை மூக்கின் அருகில் கொண்டு நுகர்வதையும் தவிர்க்க வேண்டும். அது மூக்கு, கண்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

Related Posts

Leave a Comment

Translate »