தேவையான பொருட்கள்
மிளகாய் – 10
சாம்பார் வெங்காயம் – 10
புளி – நெல்லிக்காய் அளவு
வறுத்து அரைக்க :
வேர்க்கடலை – 2 தேக்கரண்டி
எள்ளு – ஒரு தேக்கரண்டி
கடலைபருப்பு – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 5
செய்முறை
வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும்.
வெங்காயம், மிளகாயை (விதையை நீக்கிவிட்டு) பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்து அதில் மிளகாயை போட்டு வதக்கி தனியாக வைக்கவும்.
அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வதக்கிய வெங்காயம், மிளகாயை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து உப்பு போட்டு புளித் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்..
கலவை கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
சுவையான மிளகாய் சப்ஜி தயார்.