இரத்தத்தை சுத்திகரிக்கும் சில இயற்கை மூலிகை பானங்கள்

இரத்தத்தை சுத்திகரிக்கும் சில இயற்கை மூலிகை பானங்கள்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

எளிய முறையில் இரத்தத்தை சுத்திகரிக்கும் சில இயற்கை மூலிகை பானங்கள்…!!!

👉இயற்கை முறையில் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்திகரிக்கவும், விருத்தியாக்கவும் கீழே சில வழிமுறைகளை நம் முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ளனர்.

👉இரும்பு சத்து நிறைந்த முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து, அத்துடன் ஒரு நாட்டு கோழி முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

👉தேனில் ஊற வைத்த பேரீச்சம்பழத்தை ஒரு வேளைக்கு 2 அல்லது 3 வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். நாவல் பழத்திற்கு இதயத்தை பலப்படுத்தும் ஆற்றல் உண்டு, எனவே இதை அடிக்கடி சாப்பிட்டு வர‌ உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும்.

👉இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தப் படுத்தி, உடலுக்கு தேவையான ஆற்றலையும் தருகிறது.

👉செம்பருத்திப் பூவிலும் இரத்தம் விருத்தியாக்கும் சக்தி உண்டு. பூவின் நடுவில் இருக்கும் மகரந்தத்தை நீக்கி விட்டு இதழ்களை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் சூடு தீர்ந்து இரத்ததை விருத்தியாகும்.

👉தூங்கும் முன்பு இரவு அரை தம்ளர் நீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் விருத்தியாகும். பீட்ரூட் சாறு அருந்தி வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

👉இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் இரத்தம் சுத்தமாகும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகளை அழித்து இரத்தத்தை எளிதில் சுத்திகரிக்கும்.

Visits:

Related Posts

Leave a Comment

Translate »