eka-pada-rajakapotasana_இடுப்பு எலும்புகளை வலுவாக்கும் ஆசனம்

இடுப்பு எலும்புகளை வலுவாக்கும் ஆசனம்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பாதி உடலை இடுப்புதான் தாங்குகிறது. அது சமனாகும்போது, இடுப்பைதாங்கும் மூட்டு மற்றும் பாதங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படாது. இடுப்பு பலம்பெற உடற்பயிற்சி செய்வது நல்லது. அதனினும் யோகா செய்வது மிக நல்லது. யோகாவில் இடுப்பு எலும்புகள் பலம்பெற்று தசைகளுக்கு நெகிழ்வுத்தன்மை தருவது போல் ஆசனம் உள்ளது. அதுதான் ஏகபாத ராஜ கபோட்டாசனா.

ஏக பாத என்றால் ஒற்றி பாதம், ராஜ என்ரால் அரசன், கபோட் என்றால் புறா. புறாவை போன்ற தோற்றத்தில், ஒற்றை காலைக் கொண்டு ஆசனத்தை செய்வதால் இந்த பெயர் பெற்றுள்ளது. தலைக்கும் காலுக்கும் இடைப்பட்ட உறுப்புகளுக்கு பயிற்சி தருவது இந்த யோகாவின் பயனாகும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் மண்டியிட்டு அமருங்கள். பின்னர் குழந்தை தவழ்வது போல கைகளை முன்னே ஊன்றுங்கள். மெதுவாய் ஆழ்ந்து மூச்சை வாங்கி விடுங்கள். இப்போது இடது காலை மடக்கி வலது காலை பின்னாடி நீட்டவும். இரு கைகளையும் ஊன்றிக் கொள்ளுங்கள்.

பின்னர் மேலே படத்தில் காட்டியது போல்மெதுவாக வலது காலை மடக்கி மேலே நோக்கி கொண்டு வரவும். கைகளால் வலது பாதத்தினை பிடித்துக் கொள்ளுங்கள். இப்போது மூச்சினை ஆழ்ந்து இழுத்து விடுங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரவும். அதன் பிறகு இடது காலிலும் இதே போன்று செய்யவும்.

பின்பகுதிகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.. அடிவயிற்றுப் பகுதியிலுள்ள உறுப்புகள் நன்றாக இயங்கும். மனத்தளர்ச்சி, சோம்பல் நீங்கும்.

Related Posts

Leave a Comment

Translate »