நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானம் ஆக கண்டிப்பாக 3 வழிகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். உணவை நாம் எப்படி சாப்பிட்டால் அதில் உள்ள அனைத்து பொருட்களும் ரத்தத்தில் கலக்கும் என்பதற்கு இந்த மூன்று வழிகளும் முக்கியமானவை. அவை பசி, எச்சில் மற்றும் உணவில் கவனம் போன்றவைதான்.
பசிதான் நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் தயார் செய்யும் அம்சம். இந்த பசிதான் நாம் உண்ணும் உணவை நல்லபடியாக செரித்து ரத்தத்தில் கலக்கச்செய்ய உதவுகிறது. பசி இல்லாமல் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவும் கழிவாக மாறுகிறது. சில சமயம் அதுவே விஷமாகவும் மாறுகிறது. நல்ல ஜீரணத்திற்கான முதல் வழி பசித்தால் மட்டுமே சாப்பிடுவது.