தேவையான பொருட்கள்
பிரண்டைத் தண்டு – 1 கட்டு
சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – 2 கொத்து
கறிவேப்பிலை – 2 கீற்று
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பிரண்டையின் மேற்தோலை பிரித்து எடுத்து சுத்தம் செய்யவும். சுத்தம் செய்த பிரண்டையை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகினை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
குக்கரில் அரைத்த பிரண்டை விழுதினைச் சேர்த்து அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
அதனுடன் 1 ஸ்பூன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதனுடன் 4 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும்.
ஒரு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கி விடவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும் பிரண்டையில் உள்ள நீரை வடிகட்டவும். வடிகட்டில் தங்கியுள்ளதை நன்கு மசித்து மீண்டும் சூப்பில் நன்கு கலந்து விடவும்.
பரிமாறும் போது கொத்தமல்லி இலை, மிளகுப் பொடி சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
சுவையான பிரண்டை சூப் தயார்.
இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம்.
குறிப்பு
பிரண்டையை தேர்வு செய்யும் போது இளம்பச்சை நிறத்தில் உள்ள இளந்தண்டினைத் தேர்ந்தெடுக்கவும். இளந்தண்டு கைகளில் அரிப்பினை அவ்வளவாக ஏற்படுத்தாது.