தேவையான பொருட்கள்
மட்டன்-100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது- 2 டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
சீரகம்- 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை அரிசி – 3/4 கப்
பாசிப்பருப்பு – 5 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1
கேரட் – 1
பச்சை மிளகாய் -3 சிறியது
கொத்தமல்லி இலை – 1/4 கப்
புதினா இலை- 1/4 கப்
கறிவேப்பில்லை- 1 கொத்து
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1/2 இன்ச்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
வெந்தயம்-1/4 டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
தண்ணீர் – 5 கப்
உப்பு – தேவையான அளவு
துருவிய தேங்காய் – 1/4 கப்
செய்முறை
மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்த மட்டன் (எலும்பு இல்லாதது) போட்டு மட்டன் கைமா போல் அரைத்து கொள்ள வேண்டும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம், மட்டன் கைமா, மஞ்சள் தூள் பாதி, கரம் மசாலா தூள் பாதி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கேரட், கொத்தமல்லி இலை, புதினா இலைகளை நன்கு நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
மிக்ஸி ஜாரில் அரிசி, பாசிப்பருப்பு சேர்த்து பொடித்து கொள்ளவும்
தேங்காய் மற்றும் சீரகம் (1/4 டீஸ்பூன்) சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின், மீதியுள்ள சீரகம், வெந்தயம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், கேரட், புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறவும்
பின்பு மீதியுள்ள மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
சிறிது வதங்கியதும், அரிசி பருப்பு குருனையை கழுவி சேர்க்கவும். இதனுடன் 5 கப் தண்ணீர் சேர்த்து கிளறவும்.
இதனுடன் வேக வைத்த மட்டன் கைமா மற்றும் மட்டன் வேக வைத்த தண்ணீரை ஊற்றி கிளறவும்
குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
பின்பு விசில் அடங்கியதும், நன்றாக கலக்கி விட்டு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறவும்.
மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
பின்பு கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.