ஆள் பாதிஆடை பாதிஎன்பதற்கேற்ப ஒருவரின் தோற்றத்தை மட்டுமின்றி ஆளுமையையும் அவர் அணியும் ஆடைகள் நிர்ணயிக்கின்றன. பொருத்தமான ஆடைகள் நமது தன்னம்பிக்கையை மேலும் அதிகப்படுத்துகின்றன என்பது உளவியல் ரீதியாக அறிப்பட்ட உண்மை. அந்த வகையில் சற்றே உயரம் குறைந்த பெண்கள் அணிவதற்கு ஏற்ற ட்ரெண்டி உடைகளை பற்றி ஒரு சிறிய தொகுப்பு உங்களுக்காக…
* நீண்ட குர்தாவுடன் கணுக்கால் வரை உயரமுள்ள பேண்ட் அணியும் போது உங்கள் கால்கள் சற்றே நீளமாக தெரியும்.
* கருப்பு மற்றும் அடர் நிற புடவைகள், சுடிதார்கள் உயரம் குறைந்தவர்களை ஒல்லியானவர்களாகவும், உயரமானவர்களாகவும் காட்டும்.
* புடவையை பொறுத்தவரை செங்குத்துக்கோடுகள் போட்ட புடவைகள் உங்களை உயரமாக காட்டும்.
* பாலஸ்ஸோ எனப்படும் பேண்ட்டோடு கூடிய நீளமான குர்த்தாக்கள் உங்களை உயரமானவர்களாக காட்டும்.
* நீளம் குறைந்த குர்தியுடன் கூடிய சல்வாரும், உயரம் குறைவான பெண்களுக்கு பொருத்தமாக இருக்கும்.