தேவையான பொருட்கள் :
சுண்டல் – 100 கிராம்
மிளகுத்தூள் -1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 50 மி.லி
கறிவேப்பிலை- சிறிதளவு
தேங்காய் துருவல் – 50 கிராம்
சீரகம் – ½ டீஸ்பூன்
செய்முறை :
கடாயில் நெய்யைச் சேர்த்து, சுத்தம் செய்த சுண்டலை நெய்யில் நன்கு பொரித்துக் கொள்ளவும்.
கூடவே கறிவேப்பிலையைச் சேர்த்து பொரிக்கவும்.
இதன் சுவையை அதிகரிக்க தேங்காய் துருவல் போதுமான உப்பு, சீரகம், மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
இதனை வேக வைத்த சாதத்துடன் சேர்த்து உண்டார்களாம்.
குறிப்பு :
* சங்க கால மக்கள் தங்களுக்கு கிடைக்கக் கூடிய பொருட்களை கொண்டு சமைத்தார்கள்.
* சுண்டல் ஒரு பழமையான நவதானியமாகும்.
* சங்க காலத்தில் சமையலுக்குப் பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு தக்காளி, சர்க்கரை, ரீபெண்ட் ஆயில், உருளைக்கிழங்கு பயன்படுத்தவில்லை. காரத்துக்கு மிளகைப் பயன்படுத்தி உள்ளனர்.
* சுங்க காலத்தில் தேங்காயை சமையலில் அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.