Methi-Potato-Aloo-methi_சூப்பரான சத்தான ஆலு மேத்தி

சூப்பரான சத்தான ஆலு மேத்தி

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 10 பற்கள்
பச்சை மிளகாய் – 3-4
பேபி உருளைக்கிழங்கு – 1/2 கிலோ
வெந்தயக் கீரை – 250 கிராம்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெந்தயக்கீரை, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் பேபி உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து 3-4 விசில் விட்டு இறக்கி, தோலை உரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

அடுத்து மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மாங்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பின்பு வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வெந்தயக்கீரையை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் கீரை நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்து, வாணலியில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை கிளறி இறக்கினால், சுவையான வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெடி!!!

Related Posts

Leave a Comment

Translate »