உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்த எடுத்துக்கொள்ள வேண்டியவை:
உடலின் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்த கற்பூராதி சூரணம், சுவானந்தா குளிகை உள்ளிட்ட மருந்துகளை மருத்துவர்களின் அறிவுரையின் படி எடுத்துக்கொள்ளலாம்.
எலுமிச்சை, இஞ்சி, தேன் கலவையை எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை வெந்நீரால் வாய் கொப்பளிக்கலாம். முக்கியமாக பயம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
மக்களிடம் போதிய அளவு விழிப்புணர்வு இல்லை. முன்பு போல மக்கள், கொரோனா தொற்றை தடுக்கும் கபசுர குடிநீர், நெல்லிக்காய் லேகியம், நிலவேம்பு குடிநீர் உள்ளிட்ட மருத்துகளை இணை உணவுகளாக எடுத்துக்கொள்வதில்லை. இன்றைக்கு நாம் முன்னெடுத்திருக்கும் உணவு மற்றும் வாழ்கை முறைகளை மாற்றிக்கொண்டாலே நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறையாது.
அறிகுறிகளும் – அதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளும்
1. காய்ச்சல், உடல்சோர்வுக்கு நிலவேம்பு குடிநீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
2. சளி, இருமல் இருக்குமானால் அரசு வழிகாட்டுதலின் படி கபசுர குடிநீர் எடுத்துக்கொள்ளலாம்.
3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் லேகியம், அமுக்ரா சூரணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. காய்ச்சல் இருந்தால் சாந்த சந்த்ருயா மாத்திரை அல்லது பிரம்மானந்த பைரவ மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
இளைஞர்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?
இளைஞர்கள் இரவு அதிகம் நேரம் விழித்திருக்கிறார்கள், காலை உணவை தவிர்த்து விடுகிறார்கள். இந்த நடைமுறைகள் நமது உடலின் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும்.
எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்:
இது கோடை காலம் என்பதால் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். கூழ் வகைகள், அதிகளவு மோர், எலுமிச்சை ஜீஸ். நெல்லிக்காய் ஜூஸ், காய்கறி சூப் , கீரை சூப் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போல உணவில் ஆறுசுவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, மாதுளை ஆகியவற்றின் கலவை, நெல்லிக்காய், மாதுளை கலந்த கலவை உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். இவை மூலம் நமக்கு இழந்த ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடும்.
வித்தியாசமான அறிகுறிகள்:
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பு போல் அறிகுறிகள் தென்படுவதில்லை. முன்பு கொரொனா அறிகுறிகளாக சளி, இருமல், உடல்வலி, காய்ச்சல் உள்ளிட்டவைச் சொல்லப்பட்டன. ஆனால் தற்போது தொடர்காய்ச்சல், மூக்கிலிருந்து நீர் ஒலுகுதல் உள்ளிட்ட குறிகள் தென்படுகின்றன.
இன்னும் சிலருக்கு தொடர் இருமல் மட்டும் ஒருவார காலத்திற்கு இருக்கிறது. சிலருக்கு கடுமையான உடல்வலி மட்டும் இருக்கிறது. மற்ற சிலருக்கு தொடர் வயிற்றுப்போக்கு மட்டும் ஏற்படுகிறது. இவைத்தவிர வாதம் சம்பந்தமான அறிகுறிகள் கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது. ஆகையால் இந்த மாதிரியான அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோனை செய்துகொள்ள வேண்டும்.