தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து – கால் கிலோ,
பனைவெல்லம் – கால் கிலோ,
நல்லெண்ணெய் – 200 மி.லி.
செய்முறை
உளுந்தை வெறும் கடாயில் வறுத்துக் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
பனைவெல்லத்தில் தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சி, வடிகட்டி, மறுபடி அடுப்பில் வைக்கவும்.
அதில் உளுந்து பொடியை சிறிது, சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.
நன்கு வெந்ததும், நல்லெண்ணெய் விட்டுக் கிளறி, இறக்கவும்.
வயதுக்கு வந்த பெண்களுக்குக் கொடுத்தால் இடுப்பு எலும்பு வளர்ச்சி பெறும். ரத்தப் போக்கு சிக்கல்கள் தீரும்.