தேவையான பொருட்கள் :
மூங்கிலரிசி – 100 கிராம்
உப்பு -தேவையானஅளவு
அரிசி – 100 கிராம்
மிளகு (பொடித்தது)-தேவையானஅளவு
சீரகம் -1 டீஸ்பூன்
புளிச்சாறு – 2 மேஜைகரண்டி
அவரை பருப்பு (துவரம் பருப்பு) – 50 கிராம்
தண்ணீர் -தேவையானஅளவு
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு-1/2 டீஸ்பூன்
செய்முறை :
ஒரு அகலமானப் பாத்திரத்தில் கழுவிச் சுத்தம் செய்த மூங்கிலரிசி, அரிசியைச் சேர்த்து போதுமான உப்புடன் சுமார் 3 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக விடவும்.
அதனுடன் தனியே வேக வைத்த துவரம்ப்பருப்பைச் ( துவரம் பருப்பு)சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
கூடவே சீரகம், மிளகைச் சேர்க்கவும்.
தனியே கரைத்து வைத்த புளிக் கரைசலை சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்த அரிசி, துவரம் பருப்புடன் (துவரம் பருப்பு) சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
சுவையான மூங்கிலரிசி அவரை புளியங்கூழ்
சங்க கால சமையல் முறையில் செய்து ருசிக்கவும். சூடாகவோ (அ) சூடு ஆறியபின்போ இதைச் சுவைக்கவும்.
குறிப்பு :
* கருங்கறி என்று மிளகைச் சங்க காலத்தில் கூறினார்கள்.
* புரதச் சத்துள்ள அவரைப் பருப்புடன் நார்ச்சத்தும் ரூ மாவுச்சத்து கொண்டு மூங்கிலரிசியுடன் கூடவே மாவுச்சத்துள்ள அரிசியை உடலின் ஆரோக்கியத்திற்கு நம் முன்னோர்கள் அன்றே உணவைத் தேர்வு செய்து உண்டுள்ளனர்.
* நாம் இப்பொழுது தேடித் தேடி வாங்கும் ராகி, கம்பு, வரகரிசி, சோளம் ரூ தினையை நம் முன்னோர்கள் அதனை மிகுதியாய் பயன்படுத்தி உண்;டு ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர் என்று சங்க இலக்கிய பாடல்களில் நிறையக் காண முடிகிறது.
* புளி சேர்த்து வைத்த பொருள்கள் பல நாட்களுக்குக் கெடாது என்பது இன்றும் அறியப்பட்ட உண்மை.