குழந்தைகளின் குறைகளைக் கண்களில் விளக்கெண்ணையை விட்டு பார்க்காதீங்க…

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இந்த உலகமே தன் பிள்ளையைப் புகழ வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் அவர்களை தட்டிக் கொடுத்து வளர்த்து அதை சாதிப்பதில்லை. கொட்டிக் கொட்டியே வளர்க்கிறார்கள் என்கிறது மன இயல் ஆய்வுகள். இந்த ஆய்வுகள் ஒவ்வொரு வீட்டிலும் தவிர்க்க முடியாத பிரச்னையாக இருப்பது பெற்றோருக்கும் பிள்ளைக்குமான கருத்து வேறுபாடும், பெற்றோரின் கண்டிப்பும் தான் எனக் கூறுகிறது.

அதீத குறை கூறி வளர்க்கப்படும் பிள்ளைகள் தன்னம்பிக்கை குறைவானவர்களாகவும், தைரியமற்றவர்களாகவும் வளர்வதோடு, மனஅழுத்ததிற்கும் ஆளாகிறார்கள். குறைகளையே கேட்டு கேட்டு வளரும் அவர்கள் பாஸிட்டிவான சிந்தனைகள் இல்லாமல் நெகட்டிவான சிந்தனை மிக்கவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் குறை காணக் கூடியவர்களாகவும் வளர்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் தருகிறது.

பிரெஞ்ச் நாட்டின் புகழ் பெற்ற கட்டுரையாளரான “ஜோசப் யுபர்ட்” குழந்தைகளுக்கு குறை சொல்லிக் கொண்டே இருக்கும் விமர்சகர்கள் தேவையில்லை, அவர்களுக்கு நல்ல முன் மாதிரியே தேவை என நச்சென்று முன் வைக்கிறார். நம் பிள்ளைகளை நாம் குறை சொல்லாவிட்டல் பின் எப்படி திருந்துவார்கள்? இது ஒவ்வொரு பெற்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கை.உண்மையில் ஒரு மாற்றுக் குறையில்லா பிள்ளையை நான் உருவாக்கி இருக்கிறேன் என்று இந்த உலகிற்கு மார் தட்டிச் சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பது தவறில்லை தான்.

ஆனால் அதனால் நம்மையுமறியாமல் என்ன செய்கிறோம். அவர்களிடம் இருக்கும் நிறைகளையெல்லாம் நாம் மிக இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். அதைப் பற்றி சிறிதளவு கூட அவர்களிடம் சிலாகித்துப் பேசுவதில்லை. ஆனால் இதுவே குறைகளைக் கண்களில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு துருவித் துருவி பார்த்து சரி செய்ய வேண்டும் என்று முனைகிறோம்.

இதில் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்? உன்னிடம் குறையே இருக்கக் கூடாது என்று மட்டுமா சொல்லித் தருகிறோம். நீயும் இப்படித் தான் மற்றவரிடம் என்ன குறை இருக்கிறது என்று உற்றுப் பார்த்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தானே அந்த பிஞ்சு மனதில் விதைக்கிறோம்.

ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது.

படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். எது கேட்டாலும் சாடைப் பேச்சு. அது சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம்.

அந்தக் குழந்தை சட்டை வாங்கிக் கேட்டாலும், ஸ்வீட் வாங்கிக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் நம் செயலின் முடிவு அவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் அதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதிலும் தான் முடிகிறது.

Visits: 3

Related Posts

Leave a Comment

Translate »