புரதம் நிறைந்த ஜவ்வரிசி கோதுமை ரவை அடை

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி – ஒரு கப்,

கோதுமைரவை- அரை கப் ,

அரிசி மாவு, கேரட் துருவல் – தலா அரை கப்,

வெங்காயம் – 4,

இஞ்சி, பச்சை மிளகாய் – தேவையான அளவு,

தேங்காய் துருவல் – தேவைக்கு

எண்ணெய் – தேவைக்கு

உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

இஞ்சி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஜவ்வரிசியை முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியுடன், கோதுமைரவை, அரிசி மாவு, கேரட் துருவல், வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து கொட்டிய பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். இப்போது ரவை நன்றாக ஊறி மாவு கொட்டியான பதத்தில் இருக்கும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடை போல மெல்லியதாக தட்டி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக எடுக்கவும்.

இதை ஏதாவது ஒரு சட்னியுடன் சாப்பிடலாம்.

சூப்பான ஜவ்வரிசி கோதுமை  ரவை  அடை ரெடி.

Related Posts

Leave a Comment

Translate »