கவலையா இருக்கீங்களா? அப்ப இந்த ஆசனங்களை செய்யுங்க…

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கவலை மற்றும் பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே கிடையாது என கூறப்படுகிறது. நம்மால் சில ஆசனங்கள் மற்றும் சுவாச நுட்பங்கள் மூலம் மனதையும் உடலையும் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். பரபரப்பாக ஓடி கொண்டிருக்கும் நமது வாழ்க்கையில் யோகா போன்ற உடற்பயிற்சிகள் சில நேரங்களில் மிகவும் தேவையான ஒரு ஆரோக்கியத்தை வழங்குகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் பல விதமான கவலைகளை அனுபவிக்கின்றனர்.

பதட்டம் மற்றும் பீதியை மனதில் கொண்டு நன்றாக வாழ்வது என்பது நடவாத காரியமாகும். எனவே அவற்றை சரி செய்வதற்கான 5 யோகா ஆசனங்களை இப்போது பார்ப்போம்.

அர்த்த சந்திரசனா (அரை நிலவு போஸ்)

அர்த்த சந்திரசனா என்பது மன கவலையை போக்க கூடிய ஒரு முக்கியமான யோகா ஆசனமாகும். இந்த ஆசனத்தை சரியாக செய்ய உங்கள் இடது காலை பின்னால் விட்டு வலது கால் பாதத்தை காலில் ஊன்றி கொண்டு அமரவும். இப்போது உங்கள் தலைக்கு மேல் கையை தூக்கும்போது முகத்தை மேல்நோக்கி தூக்கி கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் கணுக்கால் மற்றும் உங்கள் வலது முழங்காலை சீரமைக்கவும். இப்போது மேல் உடலை பின்னோக்கி வளைத்து உடலில் ஒரு வளைவை உருவாக்கவும். இந்த நிலை பார்க்க ஒரு அரை நிலவு போன்ற வடிவத்தை கொடுக்கும் .இப்போது இதே போல மறுப்புறமும் செய்யவும்.

பாலசனா (குழந்தை போஸ்)

குழந்தை வயிற்றில் இருப்பது போன்ற நிலையில் இருப்பதால் இது குழந்தை போஸ் என அழைக்கப்படுகிறது. இதை செய்வதற்கு முதலில் உங்கள் குதிக்காலின் மீது உட்கார்ந்து கொள்ள வேண்டும். அப்படி குதிக்காலில் அமர்ந்திருக்கும்போது உங்கள் முழங்கால்களை கொஞ்ச தூரத்திற்கு பரப்பவும். இப்போது தலைக்கு மேலே உங்கள் கைகளை உயர்த்தவும். இப்போது உங்கள் மேல் உடலை வளைக்கும்போது உங்கள் கைகளை தரையில் வைக்கவும். இந்த நேரத்தில் உடல் குதிக்காலில் இருந்து விடுப்பட்டு இருக்கும்.

வேண்டுமென்றால் ஆதரவுக்காக உங்கள் குதிக்காலின் கீழே மென்மையான போர்வை அல்லது மெத்தையை வைக்கலாம். இந்த யோகா முறையை மிகவும் எச்சரிக்கையாக செய்ய வேண்டும். இது செய்ய கடினமாக இருக்கிறது என்றால் இதை முயற்சிக்க வேண்டாம்.

சேது பந்தா சர்வங்கனா (பாலம் போஸ்)

இந்த யோகா முறையை செய்ய உங்கள் கால்களை தரையில் வைத்து முழங்கால்களை வளைத்து குதிக்காலில் முடிந்த வரை நிமிரவும். நீங்கள் சுவாசிக்கும்போது உங்கள் வால் எலும்பை மேல்நோக்கி தள்ளி இடுப்பு பகுதியை தரையில் இருந்து மேல்நோக்கி தூக்குங்கள். உங்கள் தொடைகளுக்கு இணையாக கைகளை வைத்துக்கொள்ளவும். இந்த மேல் தூக்கப்பட்ட எடையை உங்களது கால்கள் தாங்கும்.

அடுத்து மூச்சை வெளியிடும்போது மீண்டும் இயல்பு நிலைக்கு வரவும். இப்படியாக 10 முறை மீண்டும் மீண்டும் செய்யவும்.

ஹலசனா யோகா முறை

இந்த முறையை செய்யும் போது உங்களது உடல் முக்கோணம் போல ஆகிறது. இந்த முறையை செய்ய முதலில் படுத்துக்கொள்ள வேண்டும். பிறகு உங்கள் கால்களை உங்கள் தலைக்கு எதிர்ப்புறம் கொண்டு செல்லவும். இதற்காக் உங்களது கைகளை வளைத்த முதுகின் மேல் வைத்துக்கொள்ளவும். இப்போது உங்கள் கால்களை 90 டிகிரி அளவில் வளைத்து அது உங்கள் வயிற்று தசையில் படும்படி வைக்கவும். இந்த நிலையில் உங்கள் கால் விரல்கள் தரையை தொடும்.

Related Posts

Leave a Comment

Translate »