இளம் தாய்மார்களுக்கு வரும் மனஅழுத்தம்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பிரசவத்திற்கு பிறகு சில பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. எப்போதும் பதற்றத்துடனும் பயத்துடனும் இருப்பது, தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம், தூக்கத்தில் மிரண்டு எழுந்திருப்பது. குழந்தையைப் பற்றி அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுதல், குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியுமா? என்கிற பயம். வீட்டில் தனியே இருக்கவும், வெளியே செல்லவும் பயப்படுதல், அழுகை, கோபம், யாரைப் பார்த்தாலும் எரிச்சல், தலைவலி, டென்ஷன், பசியின்மை, எந்த வேலையிலும் ஆர்வமின்மை.

இந்த அறிகுறிகள் 2 வாரங்களுக்கும் மேலாகத் தொடரும் பட்சத்தில் தாய்மார்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும். உளவியல் நிபுணரிடமும் ஆலோசனை பெறலாம்.

டாக்டர்கள் அல்லது மனநல ஆலோசகர்களால் மட்டுமே இந்த அறிகுறிகளை மிகச்சரியாக இனம் காண முடியும். அவர்களிடம் இந்தப் பிரச்சினையைக் கண்டறிவதற்கு என கேள்விகள் அடங்கிய பட்டியல் இருக்கும். அந்தப் பட்டியலில் உள்ள கேள்விகளுக்கு இளம் தாய்மார்கள் எப்படி பதில் அளிக்கிறார்கள் என்பதை வைத்து பிரச்சினையை உறுதி செய்வார்கள்.

முதல் கட்டமாக கவுன்சலிங் அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மட்டுமன்றி, அவரின் குடும்பத்தாருக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும். “உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். பயப்படாதே” என மன தைரியம் கொடுப்பதுதான் முக்கியமான சிகிச்சை. இதில் கணவரின் பங்கு மிக முக்கியமானது.

சில குழந்தைகள் இரவு முழுவதும் அழுதுகொண்டே இருப்பார்கள். உதவிக்கு ஆட்கள் இல்லாதநிலையில் தூக்கமின்றி, குழந்தையைப் பார்த்துக்கொள்வது இளம் தாய்மார்களுக்கு கடுமையான மன அழுத்தத்தை உருவாக்கும். இது அதிகரித்தால் மன அழுத்த நோயாக உருவெடுக்கலாம்.

எனவே, மனைவியைச் சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, கணவர் அந்த நேரத்தில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளலாம். குழந்தை அழுதால் சமாதானப்படுத்துவது, டயப்பர் மாற்றுவது போன்ற சின்னச் சின்ன வேலைகளைச் செய்யலாம்.

மன அழுத்தத்தில் இருக்கும் இளம் தாய்மார்கள் தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். நேர்மறையான மனப்பான்மை கொண்ட நபர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். குழந்தை தூங்கும்போது குட்டித்தூக்கம் போடலாம்.

தூக்கம் வரவில்லை என்றால் அந்த நேரத்தில் தனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யலாம். இசை கேட்பது, நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசிப்பது, புத்தகங்கள் வாசிப்பது என இவற்றில் எதையாவது செய்யலாம்.

Related Posts

Leave a Comment

Translate »