தேவையான பொருட்கள் :
கடுகு கீரை – 2 கட்டு
பாலக்கீரை – 1 கட்டு
வெந்தயக்கீரை – 1 கட்டு
நறுக்கிய சிறிய வெங்காயம் – அரை கப்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)
இஞ்சி, பூண்டு – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரக தூள் – அரை டீஸ்பூன்
கடுகு எண்ணெய் – 3 டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கடுகு கீரை, பாலக்கீரை, வெந்தய கீரை ஆகியவற்றை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
அதனுடன் மிளகாய், இஞ்சி, உப்பு, போதுமான நீர் சேர்த்து அரை மணி நேரம் வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரக தூள், பூண்டு, வெங்காயம், மிளகாய் தூள் ஆகியவற்றை கொட்டி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதனை வேகவைத்த கீரை வகைகளுடன் சேர்த்து கொதிக்கவைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்.
சாப்பிடும்போது இந்த தொக்குடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பு: பச்சையாக கடுகு கீரை கிடைக்கவில்லை என்றால் பதப்படுத்தப்பட்ட டின் கீரையை வாங்கி பயன்படுத்தலாம். ஏனெனில் கடுகு கீரை வருடத்தில் 4 மாதங்கள் மட்டும்தான் கிடைக்கும்.
ஆரோக்கிய பலன்: கடுகு கீரை தொக்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மற்றும் தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். எலும்புகளும், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். புற்றுநோய் வராமலும் தடுக்கும்.