தேவையான பொருட்கள்
பச்சை பயிறு – 1/2 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
மிளகாய் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் பச்சை பயிறு, வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு அவித்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கிய பின்னர் அவித்ததைப் கொட்டி உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தூவி இறக்க வேண்டும்.
சப்பாத்தி செய்து அதற்கு குருமாவாக பயன்படுத்தலாம். ருசியாக இருக்கும்.
குறிப்பு:
* கருவுற்ற பெண்கள் தினமும் முளைகட்டிய சிறுபயிறு எடுத்துக்கொள்வது நல்லது.
* இரவில் பச்சை பயிறு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வாயுவை உற்பத்தி செய்யும்.
* குழந்தைகளுக்கு அளவாக கொடுக்க வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் வயிறு உப்பிசம் ஏற்படும். பேதியாகலாம்.
ஜீரண சக்தி குறைபாடு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை, சீறுநீரகப் பாதிப்பு கொண்டவர்கள் மிக குறைவான அளவில் பயன்படுத்த வேண்டும்.