தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் – கால் கிலோ
கடுக்காய் – கால் கிலோ
தான்றிக்காய் – கால் கிலோ
செய்முறை: நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் கொட்டைகளை நீக்கிவிட்டு வெயிலில் உலர்த்தவும். நன்கு காய்ந்ததும் நைசாக அரைத்து பயன்படுத்தலாம்.
ஆரோக்கிய பலன்: இவை மூன்றும் பழ வகைளை சேர்ந்தது. நம் முன்னோர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் பொடியை போட்டு ஊறவைக்கவும். அதை மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிக்கவும். இதில் தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது. மூளை, வயிறு மற்றும் செல் களின் வளர்ச்சிக்கு ஏற்றது. மலச்சிக்கலையும் சரி செய்யும். ரத்தத்தையும் சுத்தப்படுத்த உதவும். மூன்று மாதங்கள் தொடர்ந்து பருகிவிட்டு பின்னர் ஒரு மாதம் இடைவெளி விட்டு மறுபடியும் பருகி வரலாம்.