தேவையான பொருட்கள் :
கெட்டித் தயிர் – ஒரு கப்,
குங்குமப்பூ – சிறிதளவு,
காய்ச்சி ஆற வைத்த பால் – 2 டீஸ்பூன்,
சர்க்கரை – தேவையான அளவு,
பிஸ்தா, பாதாம் துருவல் – தலா 2 டீஸ்பூன்.
செய்முறை :
பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைக்கவும்.
தயிருடன் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து மிக்சியில் அடித்து எடுத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்.
மேலே பாதாம், பிஸ்தா துருவல் தூவி அலங்கரித்து பரிமாறவும்.